இலங்கைக்கு மியன்மார் அரிசி வழங்கி உதவி!
இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்க மியன்மார் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜே.எம். பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
யாங்கூனில் உள்ள வர்த்தக துறைமுகத்தில் இந்த அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டதோடு இலங்கையுடன் நிலவும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கருத்தில் கொண்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு இந்த உதவி மிகவும் முக்கியமானது எனவும் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜே.எம். பண்டார குறிப்பிட்டுள்ளார்.
-(3)




