செய்திகள்
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கைக்கான ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-(3)




