இலங்கையினை பொருளாதார நெருக்கீட்டு நிலையில் இருந்து ஜனநாயகத்தை மேம்படுத்தலுக்கான உத்தி
மருத்துவர் சி.யமுனாநந்தா
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தளம்பல் நிலையில் ஜனநாயக சூழல் அற்றுப் போகும் தன்மையும் நிர்வாக அதிகாரிகளது சர்வாதிகாரப் போக்கு அதிகரிக்கும் தன்மையும் உள்ளது. இத்தைகைய சூழலில் புதிய மக்கள் பிரதிநிதிகளின் ஆளுமை மிகவும் அவசியமானதாகும். எமது இளைய சமூகத்தில் இருந்து புதிய அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பு அனைத்து மக்களுக்கும் உள்ளது.
பொருளாதார மேன்னிலை மூன்று மட்டங்களில் உருவாக்க வேண்டும். முதலாவது நுண்ணிதிய விருத்தி (Micro Level) தனிநபர் குடும்ப மட்டத்தில் உருவாக்கப்படல் வேண்டும். இங்கு வறிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படல் வேண்டும். இதனால் சமூக உளப்பிரச்சனைகள் இல்லாது போகும். இரண்டாவதாக இடைநிலை (Meso Level Economic Development) மேற்கொள்வதற்கு கிராம மட்ட, பிரதேச மட்ட, மாவட்ட மட்ட, மாகாண மட்ட பொருளியல் செயற்பாடுகள் அவசியமானவையாகும் .இதற்கு முக்கியமானது உள்ளுராட்சிகளுக்கும் மாகாண சபைகளுக்கும் உரிய மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படலே ஆகும்.
எமது இடைநிலை பொருண்மிய மேன்மைக்கு (Meso Level Economic Development) தற்போதய பொருளாதார தளம்பல் நிலையில் மாகாண சபைத் தேர்தல்களும், உள்ளுராட்சி சபைத் தேர்தல்களும் மிகவும் முக்கியமானது.
மூன்றாம் நிலை பொருண்மிய மேன்பாடு (Macro Level Economic Development) ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத் திட்டமிடலில் தங்கியுள்ளது. இதற்கு சிறந்த வெளிநாட்டு இராஜதந்திர அணுகு முறைகளும் ஊழல் அற்ற வெளிப்படையான அரசியல் அனுகுமுறைகளும் அவசியமாகும். இதற்கு முதலில் பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படல் வேண்டும். அதன்பின் சனாதிபதி தேர்தல் நிகழ்த்தப்படல் வேண்டும்.
சமூக அரசியல் செயற்பாடுகளுக்கு எமது பிரதேசத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களும் மாகாண சபைத் தேர்தலுகளும் முக்கியமானதாகும். ஒரு பிரதேசத்தின் பொருளாதாரத்தினை மேம்படுத்த தற்போதைய சூழலில் இவையே அவசியமானவை. இத்தேர்தல்கள் நடைபெறாவிடின் அரசியல் ஆளுமைகளுக்கான வெற்றிடத்திதை நாம் ஏற்படுத்திவிடுவோம். மாறாக சனாதிபதித்தேர்தல் பாராளுமன்றத் தேர்தல்கள் மதவாதம் இனவாதத்தை மையப்படுத்தி சமூக முரண்;பாடுகளை அதிகரிக்கும்..
குறிப்பாக இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் அதிக அளவிலான சமூக நோக்கிலான அரசியல் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய ஜனநாயக வெளி அவசியம்.
அடுத்த பொருளாதார மீட்சிக்காக இராணவச் செலவீனங்களை குறைத்தல் மிகவும் அவசியமானதாகும். வெறும் சட்டங்களாலும் வரிகளளாலும் மட்டும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
ஜனநாயக ரீதியில் சமூகக் கடமைகளை உருவாக்குவது தற்போதைய பொருளாதாரத் தளம்மல் நிலையில் மிகவும் அவசியம்.
மேலும் திண்மப் பணத்தினை வெளியே மக்களுக்கு நிவாரணமாக வழங்க குறித்த அளவு பணத்தினை அச்சிடவேண்டிய தேவையும் சமூக பொருளியல் நோக்கில் அவசியமானதாகும்.
தற்போது இலங்கையில் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு பொருளாதாரச் சுமையும் உத்தேசிக்கப்படுகின்ற சனாதிபதித் தேர்தல் பற்றிய எதிர்பார்ப்புக்களுமே காரணமாகும். எனவே அரசியல் ரீதியில் தொழிற்சங்கப் போராட்டங்கள் சமூக குழப்பங்களுக்கும் நாட்டின் மொத்தப் பொருளாதாரத் தாழ்வுக்கும் காரணமாக அமைந்துவிடும். இவற்றினை நாம் கடந்த காலங்களில் கண்ணுற்றோம். எனவே இவை எதிர்காலத்தில் நடைபெறாது இருக்க வகை செய்தல் வேண்டும்.
மேலும் இனரீதியான அரசியல் செயற்பாடுகள் சனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்கல்களில் இல்லாது அமைந்தாலேயே நாம் சமூக முரண்பாடு இல்லாத பொருளாதார மேன் நிலையையும் சுபீட்சத்தினையும் அடைய முடியும்.


