செய்திகள்

இலங்கையின் ஜனநாயக சீர்திருத்த முயற்சிகளிற்கு கடும் அழுத்தத்தை அளிக்கப்போகும் மகிந்தவின் மீள்வருகை

அலன்கீனன்
தமிழில் சமகளம் செய்தியாளர்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகஸ்;ட் பொதுத்தேர்தலில் முக்கிய எதிhகட்சியின் பிரதான வேட்பாளராக மீண்டும் அரசியல்களத்தில் குதித்துள்ளதும்,அவர் பிரதமராவதற்கான சாத்தியங்கள் உள்ளமையும், ஜனநாயகத்துடனான இலங்கையின் குறுகியகால தேனிலவு முடிவிற்கு வந்துள்ளதையும் மீண்டும் பிரிவினை அரசியலிற்கு நாடு திரும்புவதை உணர்த்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் ஆச்சரியமளிக்கும் வெற்றியை பெற்று ஆறு மாதத்திற்கு பின்னர், சிறிசேன தான் வெளியேற்றிய நபரிடமிருந்து புதிய சவாலை எதிர்கொள்கின்றார். ராஜபக்சவின் எதேச்சதிகார, குடும்ப ஆட்சியின் கீழ் பலவீனப்படுத்தப்பட்ட இலங்கையின் ஜனநாயகத்திற்கு சிறிசேன புத்துயுர் அளித்தார்.

ராஜபக்ச குறிப்பிடத்தக்க ஆதரவுடன் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதானது அரசியல் சீhதிருத்தங்கள், மற்றும் நல்லிணக்க முயற்சிகளை கடும் அழுத்தங்களிற்குள்ளாக்கும்.

தனது அரசியல் வாழ்க்கையை பணயம்வைத்த சிறிசேன சுகாதார அமைச்சர்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் என்ற தனது இரு முக்கிய பொறுப்புகளையும் துறந்து நவம்பர் 2014 இல்வெளியேறினார்,அதன் பின்னர் அவ்வேளை எதிர்கட்சியாக காணப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணிக்கு தலைமைதாங்கி மகிந்தராஜக்சவை தோற்கடித்தார்.

ஊழல் ஓழிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துதல் ஆகிய உறுதிமொழிகளை அடிப்படையாக வைத்து தேர்தலில் குதித்த சிறிசேன சிங்கள பெரும்பான்மையினத்தவர்pன் வாக்குகளையும், சிறுபான்மையினத்தவர்களின் மிகப்பெரும்பான்மையான வாக்குகளையும் பெற்றார்.

ஜனவரியில் ஆட்சிக்கு வந்த பின்னர் சிறிசேன மகிந்த ராஜபக்சவின் சிங்கள தேசியவாதத்தை மைய்படுத்திய சொல்லாடல்களிலிருந்து விலகினார்.பிரதமரிற்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகாரத்தை வழங்கினார். மேலும் அவர் சிறுபான்மை மக்களின் நீண்ட காலதுயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதன் மூலம் அவர்களுடன் உறவுகளை சீர்செய்ய முயன்றுள்ளார்.

எனினும் நாட்டை துண்டாடிய இனமதரீதியிலான காயங்கள் இன்னமும் குணப்படுத்தப்படாதநிலையிலுள்ளன,மேலும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிறைவேற்றப்படாத விடயங்களும் உள்ளன. இதில் பொறுப்புக்கூறுதல் மாத்திரமல்ல,இனரீதியிலான பிரிவினைக்கு பேச்சுவாhத்தைகள் மூலம் தீர்வை காணுதல், இராணுவத்தை அகற்றுவதற்கான
முழுயைமான திட்டம்,போன்றவையும் அடங்கும்.

mr8

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் வெல்லாவிட்டாலும்,பாராளுமன்றத்தி;ல் அவர் பிரசன்னமாகியிருந்து சிங்கள தேசியவாத சக்திகளிற்கு தலைமை தாங்குவதன் மூலம் இன ரீதியிலான பிரிவினையை தீவிரப்படுத்துவார்,ஜனநாயக சீர்திருத்தங்களை மேலும் முன்னெடு;ப்பதற்கு கடும் சவாலாக விளங்குவார்.

யூலை மாதம் முதல்நாளில் ஆற்றிய உரையில் மகிந்த ராஜபக்ச தேசப்பற்றுள்ள சக்திகளை தாய்மண்ணை பாதுகாக்க ஓன்றிணையுமாறு கோரினார்.சிறிசேன- விக்கிரமசிங்க அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பினை அலட்சியம் செய்துள்ளது, பயங்கரவாதிகளிற்கு ஆதரவளித்துள்ளது, பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியுள்ளது என அவர் குற்றம்சாட்டினார்.கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் பாரிய பேரணிகளின் மையப்பொருளாக இந்த விடயங்களே காணப்படுகின்றன.கடந்த பெப்ரவரியில் ஆரம்பமாகிய இந்த பேரணிகளில் ராஜபக்சவை மீண்டும் அரசியலில் நுழையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பபட்டுள்ளது. ராஜபக்ச சிங்களவர்கள் மத்தியில் இன்னமும் செல்வாக்குள்ளவராக காணப்படுகின்றார் . குறிப்பாக கிராமப்பகுதி சிங்கள மக்கள் மத்தியில்.

ஜனவரியில் தேர்தலில் வென்ற சில நாட்களிற்கு பின்னர் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தை ராஜபக்சவிடமிருந்து பெற்றுக்கொண்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைமைபொறுப்பையும் ஏற்றார். எனினும் தனது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு குறிப்பிடத்தக்க விட்டுக்கொடுப்புகளை வழங்கிய போதிலும் சிறிசேனவால் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகஸ்ட் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பாரிய வெற்றியை பெறுவதை தடுக்க கூடிய ஓரே சக்;தியாக மகிந்தராஜபக்சவை கருதுகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பையும் கட்டுப்படுத்துவதற்கு சிறிசேன மிகுந்த சிரமப்படுகின்றார். அதேபோல மகிந்தராஜபக்ச மீண்டும் பாரளுமன்றம் நுழைவதை தடுக்கவும் சிறிசேன கடும் சிரமப்படுகின்றார்.

SriLankaLeaders-e14361897671171முன்னாள் ஜனாதிபதிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற யூலை 3 ம் திகதி அறிவிப்பு சிறிசேன ஆதரவாளர்களிற்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது, மேலும் ராஜபக்சவுடனான மோதலில் சிறிசேன சரணடைந்துவிட்டார் என்பதற்கான அறிகுறியாகவும் இது காணப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலுள்ள சிறிசேன ஆதரவாளர்கள் தனியாக பிரிந்து போட்டியிடுவது குறித்து திறைமறைவு பேச்சுக்களை மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துபோட்டியிடுவது குறித்தும் அவர்கள் சிந்தித்து வருகின்றனர். பொதுத்தேர்தலிற்கா வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான காலம் மிகவும் குறைவாகவே உள்ளதால் கடந்த ஜனவரியை போன்று ராஜபக்சவிற்கு எதிரான பாரிய கூட்டணியை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.

ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பின்னரும் ராஜபக்சவிற்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட ஆதரவு மற்றும் சிங்கள தேசியவாத எண்ணங்களின் கவர்ச்சி ஆகியவை காரணமாக கடந்த ஆறு மாதகாலப்பகுதியில் சிறிசேனவின் துணிச்சல் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்பட்டது.

சிறிசேனவினால் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் பல சட்டமூலங்களை தடுத்து நிறுத்த முடிந்தது.

சிறிசேனவின் பெரும் வெற்றியாக கருதப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் சட்டமூலத்தை கூட ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினரால் பலவீனப்படுத்த முடிந்தது.

சிங்கள தேசியவாத சக்திகளை அதிருப்திக்குள்ளாக்க விரும்பாததாலும்,முன்னாள் ஜனாதிபதியின் பிரச்சாரத்தினை பலப்படுத்த கூடிய சூழலை உருவாக்க விரும்பாததாலும், ஜனாதிபதி சிறிசேன தமிழ் மக்களுடனான நல்லிணக்க நடவடிக்கைகளை முழுiமாக முன்னெடுக்கவில்லை.

சிங்கள மக்களினதும் இராணுவத்தினதும் உணர்வுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக சிறிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான உள்நாட்டு பொறிமுறையை ஏற்படுத்துவதை தற்போதைக்கு தவிர்த்துள்ளதும் முக்கியமானது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்காளர்களிற்கும் பின்னர் ஐ.நாவிற்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதி இதுவாகும். கடந்த பெப்ரவரியில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ஓத்திவைக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை செப்டம்பரில் வெளியாகவுள்ளது.

ராஜபக்சவும்,அவரது சகாக்களும் பொறுப்புக்கூறுதல் மற்றும் ஐக்கிய நாடுகளுடனான ஓத்துழைப்பு ஆகியவற்றை முற்றாக நிராகரித்துள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களில் இது ஓரு முக்கிய விடயமாக இடம்பெறும். தேர்தல் பிரச்சாரங்கள் கடும்போட்டி மிகுந்தவையாகவும், வன்முறைகள் மிகுந்தவையாகவும் காணப்படலாம்.

ஐக்கிய தேசிய கட்சியே அதிகளவு ஆசனங்களை கைப்பற்றும் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்ற அதேவேளை பாராளுமன்றத்திற்கு மீண்டும் வரும் ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கியதேசிய கட்சியை பிளவுபடு;த்தலாம் என்ற அச்சமும் காணப்படுகின்றது.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் சிறிசேனவிற்கு ஏதாவது பங்களிப்புள்ளதா அவர் எத்தகைய பங்களிப்பை வழங்குவார் என்பதும் தெளிவற்ற விடயமாக காணப்படுகின்றது. ஜனநாயக சீர்திருத்தங்களின் நல்லிணக்கத்தின் தலைவர் என்ற சிறிசேனவின் பெயரிற்கு மிகமோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையின் யுத்தத்திற்கு பிந்திய சவால்கள் எவ்வளவு கடினமானவை என்பதை கடந்த ஆறு மாதங்கள் புலப்படுத்தியுள்ளன.

ஜனவரியில் நடைபெற்ற ஜனநாயக புரட்சி குறித்து சர்வதேச சமூகம்கொண்டுள்ள நம்பிக்கை அளவுக்கதிகமானது. ஆனால் சிறிய,அதிகரித்த முன்னேற்றத்தை காப்பாற்றுவதற்கு சிறிசேன தனது தேர்தல்கால கொள்கைளிற்கான மீள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டும், சிறிது அதிஸ்டமும் அவசியம்.