இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் தளம்பலுராமல் இருக்கும் உபாயம்
மருத்துவர் சி. யமுனாநந்தா
ஒரு நாட்டின் உற்பத்தி அதன் செலவீனங்களை விட அதிகமாக இருக்கும் பட்சத்திலேயே அந் நாடு வளர்ச்சி அடையும். மாறாக உற்பத்திகள் இன்றி அபரிமித செலவுகளை செய்தால் அந்நாடு வீழ்ச்சி உறும். இதன் போது அந் நாட்டிற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்தல் கடினமாகும். இதனை நாம் கடந்த வருட அனுபவத்தில் கண்ணுற்றோம். எரிபொருள் இறக்குமதிப் பாதிப்பு நாட்டின் சகல மக்களின் நுகர்வினையும் வாழ்கையினையும் பாதித்தது. மேலும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குரிய ஆற்றலும் இல்லாத நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் வரி அறவிடல் வேலைகளை குறைத்தல் இ மின்சாரக் கட்டணத்தை உயர்த்தல் என்பன தற்காலிக தீர்வைத்தரினும் நீண்டகால பொருளாதார ஸ்திர நிலை குறித்து நாம் இங்கு சிந்திக்க வேண்டும்.
மேனாட்களில் சூழல் நேயமிக்க மின்சாரவூர்திகளின் பாவனையும் பற்பல தொழில் முயற்சிகளிற்கும் மக்களின் அன்றாட மின்சாரப்பாவனைக்கும் உரிய சக்தியினை நாம் மலிவாகவும் இலகுவாகவும் சூழல் நேயமிக்கதாகவும் அதிக முதலீடு இல்லாததாகவும் தெரிவு செய்தல் அவசியம். இதில் முதன்மையானது தென் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற அணுமின்சக்தியினை இரமேஸ்வரம் தலைமன்னார் வழியாக இலங்கைக்கு எடுப்பதற்கு இராஜதந்திரரீதியில் இந்திய அரசுடன் இலங்கை அரசு முயற்சி எடுத்தல் அவசியம் குறிப்பாக மிதக்கும் மின் வலையமைப்புகள் மூலம் சாத்தியமாகலாம். இதனால் இலங்கையின் வடக்கு கிழக்கு மலையகத் தமிழர்களின் வாழ்கைத்தரமும் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைத்தரமும் உயரும். அடுத்து தகவல் தெழில்நுட்பத்திற்கான செய்மதி உதவிகளை இந்தியாவில் இருந்து குறைந்த செலவில் பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கூறிய இரு பொருளாதாரத்தீர்வுகள் இலங்கையினை கடந்த வருடத்தைப் போல் மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு இட்டுச் செல்வதனைத் தவிர்க்கும். ஈழத்தமிழர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் புதிய உலக ஒழுங்கில் பொருளாதார யுத்தம் தமிழ் மக்களை காவு கொள்ளாது இருப்பதற்கு மிகவும் காத்திரமான உபயமாக இதனைக் கைக்கொளள்ளல் மிகவும் அவசியமானது.


