செய்திகள்

இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் இன்று காலை காலமானார்

இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் இன்று தனது 88 வயதில் காலை காலமானார்.இவர் அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மிளிர்ந்து, தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தின் சிறுகதையாளரும், நாவலாசிரியரும், இலக்கிய ஆய்வாளருமான இவர் இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராக அறியப்பட்டவர்.புதிய நூல்கள்,சஞ்சிகைகள் பற்றிய குறிப்புக்களை நிறையவே எழுதி அவை தொடர்பான விமர்சனங்களுக்கு பெரும் பங்காற்றியவர்..இனி இவரை போன்றோரை ஈழத்து எழுத்துலகம் சந்திக்குமா என்பது சந்தேகமே.(15)