இலங்கையிலிருந்து வெளிநாடுகளிற்கு அரிசி ஏற்றுமதி
இலங்கையிலிருந்து அரிசியை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30,000 மெற்றிக்தொன் அரிசியினை உலக உணவுத் திட்டத்திடன் ஊடாக அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியா, கொன்யா மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையின் அரிசியை கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பீ.திசாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டார்.
சுமார் இரண்டு இலட்சம் மெற்றிக்தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பீ.திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
n10




