செய்திகள்

இலங்கையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் உள்பட 6 மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் 27 மீனவர்களையும், 79 படகுகளை விடுவிக்கக் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று நாகை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்களும் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் கரைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் 29ம் தேதி சென்னையிலுள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

N5