செய்திகள்
இலங்கையில் இன்னும் சமாதானம் ஏற்படவில்லை : சந்திரிகா
நாட்டில் யுத்தம் முடிந்தாலும் இன்னும் சமாதானம் கிடைக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்களின் பிர்ச்சினைகளுக்கு தீர்வு காண சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. ஆனால் ஆட்சியாளர்களோ அதனை செய்யவில்லை. அவர்கள் இனங்களுக்கிடையே ஒற்றுமையின்மை இருக்க வேண்டுமென்ற கொள்கையிலேயே செயற்பட்டனர். இதில் யுத்தம் உருவானதும் இவ்வாறுதான். பயங்கரவாதத்தை முடித்ததை வரவேற்கின்றேன்.
ஆனால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால் ஆட்சியாளர்களோ அவ்வாறு செயற்படவில்லை. ஒரு பிரிவினர் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கினர். நாம் யுத்தத்தில் வென்றாலும் சமாதானத்தில் வெற்றிக்காணவில்லை. இதனால் சமாதானத்தை வெற்றிக்கொள்ள வேண்டும். அதற்கான வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.
n10




