செய்திகள்

இலங்கையில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் – சுகாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் இந்த நாட்களில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் போலவே, இது இருமல் மற்றும் சளி ஆகியவற்றில் தொடங்கி நிமோனியா வரை மிக அரிதாகவே அதிகரிக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கொரோனா வைரஸுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.(15)