செய்திகள்

இலங்கையில் இன்று இதுவரை 280 பேருக்கு தொற்று

நாட்டில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 8,152 ஆக பதிவாகியுள்ளது.கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக இன்று இதுவரை 280 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4,678 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 4,203 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் மேலும் 130 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர்.(15)