இலங்கையில் இராணுவ புரட்சி நடந்தால் இந்தியா போர் கப்பல்களை அனுப்பி முறியடிக்கும் : எஸ்.பி.திஸாநாயக்க
இலங்கையில் இராணுவ சதிப் புரட்சியொன்று இந்தியாவினால் அது அம்முயற்சியை முறியடிக்கப்படுமென சமூக சேவை கள் மற்றும் சமூக நலனோன்புகை துறை அமைச்சர் எஸ்.பி.திசா நாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் சதிச் செயலை இந்தியாவின் துணை யுடன் எமது அரசாங்கம் முறியடிக்கும்.
சிறிசேன அரசாங்கம் இந்தியாவுடன் நல்ல நட்புறவைப் பேணி வருகிறது. இதனால் இலங்கையில் இராணுவப் புரட்சி வெடிப்பதை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொண்டிருக்காது. ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் சிறிசேன அரசாங்கத்தை காப்பாற்றும் வகையில் இந்தியா இரு போர்க் கப்பல்களை அனுப்பி வைக்கும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




