இலங்கையில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் இல்லை : அரசாங்கம்
இலங்கையில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்டோர் இல்லை என்பது பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தின் மூலம் கண்டறியப்பபட்டுள்ளதாக இன்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்னவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப்பிரிவு இந்த விடயம் தொடர்பாக ஆராய்நது தேசிய பாதுகாப்பு சபைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கமைவாக இந்த அமைப்பில் எவரும் இணையவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களான முஸ்லிம் மக்கள் இதனால் கலக்கமடைந்துள்ளனர். முஸ்லிம் மக்கள் முன்னைய ராஜபக்ஷ ஆட்சி;க்காலத்தில் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்தனர். அந்த இருண்ட யுகத்திலிருந்து மீட்சிபெறவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் சமகால அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் வாக்குகளை முன்னர் பெற தவறியோர் மீண்டும் அதனை பெறுவதற்கு முயற்சிப்பவர்களே நாடுதளுவிய ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். ஒருபோதும் முஸ்லிம் மக்கள் இவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர். இதற்கு வடக்கில் ஆவா நாவா என்று புதிய விடயங்களை உருவாக்கப்பாக்கின்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




