இலங்கையில் குரங்கு அம்மை அச்சம் உள்ளதா?
இலங்கையில் தற்போது சிகிச்சைபெற்றுவரும் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவரிடம் இருந்து ஏனையோருக்கு தொற்று பரவும் அபாயம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான இளைஞர் குணமடைந்து வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
எவ்வாறாயினும், நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியரை நாடுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தெற்காசியாவில் குரங்கு அம்மை தொற்றுடன் இதுவரை 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச ரீதியில் இந்த தொற்றினால் 73,434 பேர் பாதிக்கபட்டுள்ளதுடன் 29 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
-(3)




