செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழப்பு – தொற்றினால் 10 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 772ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 70 ஆயிரத்து 952ஆக அதிகரித்துள்ளது.(15)