இலங்கையில் சிறுவர் தொழிலாளர்களை முற்றாக இல்லாது செய்ய கொள்கை திட்டம்
இலங்கையில் சிறுவர்கள் தொழில்களில் அமர்த்ப்படுவதை முற்றாக ஒழிக்கும் வகையில் தேசிய கொள்கை திட்டமொன்றை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையினை மீள் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் ஒழுங்கின் கீழ் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை முழுமையாக ஒழிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிப்பது தொடர்பிலான தேசிய கொள்கையொன்றை தயாரித்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. -(3)




