செய்திகள்

இலங்கையில் தகவல் அறியும் உரிமை இந்தியாவை விட பலமானது

இலங்கையின் தகவல் அறியும் உரிமை சட்டம் இந்தியாவைவிடவும் பலமானதாக இருக்குமென இந்தியாவின் டில்லி மற்றும் சென்னை மேல் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசரும் , சட்ட ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அஜித் பிரகாஷ் ஷா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் ஆரம்பமான சர்வதேச தகவல் அறியும் தின மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தகவல் அறியும் உரிமை அடிப்படை உரிமைகளுல் ஒன்றாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த சட்ட மூலம் இலங்கையில் பலமானதாக இருக்கும். இந்தியாவில் சிறப்பாக இந்த சட்டம் செயற்படும் போதும் அடிப்படை உரிமையாக அத குறிப்பிடப்படவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -(3)