செய்திகள்

இலங்கையில் பாதாள குழுவினர் தலை தூக்கினர் : தொடர்ச்சியாக துப்பாக்கி சூடுகள்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும் அண்மைக்காலமாக பாதாள உலக குழுவினருக்கிடையேயான மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் அம்பாந்தோட்டை நகரில் பொலிஸ் நிலையத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் இருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்ததுடன் கொழும்பில் பொரளை பகுதியில் ஒரே நேரத்தில் மூவர் வெவ்வேறு இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொள்ளப்பட்டிருந்தனர். அத்துடன் நேற்று முன்தினம் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதுடன் அதில் பிரபல பாதாள உலக குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.
இதேவேளை நேற்றைய தினம் வெலிக்கடை பகுதியில் மற்றுமொரு பாதாள உலக குழுவை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் இன்றைய தினம் கொச்சிக்கடை பகுதியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் பாதாள உலக கும்பலுக்கு எதிராக பாதுகாப்பு செயலாளரினால் கடும் நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதன்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருந்த பாதாள குழுவினர் தற்போதைய ஆட்சியில் மீண்டும் நாடு திரும்பி தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
n10