செய்திகள்

இலங்கையில் பியர் அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது : ஜனாதிபதி

இலங்கையில் பியர் அருந்தும் பெண்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்துச் செல்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் புகைத்தல் நாட்டில் குறைவடைந்துள்ளதுடன மது பாவனை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற “மிதுரு மிதுரோ” ( நண்ப ,நண்பிகள்) அமைப்பின் விருது வழங்கல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)