செய்திகள்

இலங்கையில் 2015இல் 3000 பேர் தற்கொலை : ஆண்களே அதிகமாம்

இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 3000 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக தற்கொலை செய்துக்கொண்டவர்களில் அதிகமானோர் ஆண்களெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தற்கொலை செய்துக்கொள்வோரை தடுக்கும் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தற்கொலை செய்துக்கொள்வோரை தடுக்கும் தரவுகளின் பிரகாரம் ஆண்டொன்றிற்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்துக்கொள்வதாகவும், அதில் இலங்கை 22 ஆவது இடத்தை பிடித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -(3)