இலங்கையை பாராட்டிய ஐ.நா.செயலாளர் நாயகம்
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.
நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஐ.நா செயலாளர் நாயகம் தமது பாராட்டை தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கையில் சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்றுள்ள ஐ.நா செயலாளர் நாயகம், இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அதிகபட்ச ஒத்துழைப்பை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பிற்காக அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகத்தை இதன்போது ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பொதுச் சபை கூட்டத்தொடரில், சர்வதேச நாடுகளுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டுமென தாம் நம்புவதாக பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.
n10




