செய்திகள்

இலங்கையை மலேரியா அற்ற நாடக உலக சுகாதார நிறுவனம் பிரகடனம்

இலங்கையை மலேரியா அற்ற நாடாக பிரகடனப்படுத்தி இருக்கும் உலக சுகாதார நிறுவனம், மலேரியா ஒழிப்பு தொடர்பில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒரு உண்மையான குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டி இருக்கிறது.

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையானது மலேரியாவினால் பாதிக்கப்பட்ட மோசமான நாடுகளில் ஒன்றாக இருந்தது என்றும் ஆனால் மலேரியாவை ஒழிப்பதற்கு இலங்கையானது மலேரியா ஒட்டுண்ணியை காவும் நுளம்புகளை மட்டுமன்றி அந்த ஒட்டுண்ணிகளை அழிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த சாதனையை அடைந்திருக்கிறது என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். சுகாதார கல்வி மற்றும் வினைத்திறன் மிக்க கண்காணிப்பு ஆகியவையும் இதற்கு உதவி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
.
கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இலங்கையில் எந்த மலேரியா தாக்கமும் அறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.