செய்திகள்

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வட்ஸ்அப் சேவை செயலிழப்பு

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.வாட்ஸ்அப் செயலிழந்துள்ளதால் ஆயிரக்கணக்கான பயனர்களால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.இதன் காரணமாக பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை.எனினும் இதற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.(15)