இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவருக்கு உரிமையில்லை: பிரதமர் ரணில்
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வந்து தமக்கு விரும்பியவாறு மீன்பிடியில் ஈடுபடுவதற்கான உரிமை இல்லை. அவ்வாறானதொரு உரிமையை அவர்களுக்கு வழங்கவும் முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வர்த்தக ரீதியாக ட்ரோலர்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதை சம்பிரதாயபூர்வ மீன்பிடி என ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை கடற்பரப்புக்குள் வந்து குறிப்பிட்ட நாட்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எவ்வாறானதொரு முடிவு எடுப்பதாயினும் அது வடமாகாண மீனவர்களின் விருப்பத்துடனேயே எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இரு நாட்டுக்கும் இடையிலான மீன்பிடிப் பிரச்சினையை இவ்வருடத்துக்குள் தீர்ப்பதற்கே எதிர்பார்த்திருப்பதாகவும், இவ்விடயத்தை வைத்துக்கொண்டு யுத்தமொன்றுக்குச் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்ட பிரதமர், பொட்டம் ட்ரேலிங் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.
R-06




