செய்திகள்

இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் : அமைச்சர் அமரவீர தெரிவிப்பு

சட்ட விரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுமென  கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற் எல்லலக்குள் அத்துமீறி நுளைந்து இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. எவ்வாறாயினும் நாம் அவர்களை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். படகுகளுடன் அவர்களை கைது செய்வோம். இது தொடர்பாக கடற்படையினருக்கும் கரையோர ரோந்து பிரிவினருக்கும் நாம் அறிவித்துள்ளோம். எவ்வாறாயினும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அண்மையில் இந்திய வெளி விவகார அமைச்சர் இங்கு வருகை தந்திருந்த போது கதைத்தோம். இதன்படி விரைவில் இந்திய மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.
n10