செய்திகள்

இலங்கை – சீனா உறவில் சிக்கல்?

இலங்கையிலுள்ள சீனா தூதுவர் அரசாங்கத்தினதும் மற்றும் நிதி அமைச்சினதும் பொருளாதார திட்டங்கள் தொடர்பாக விமர்சித்துள்ள நிலையில் இது இரு நாடுகளுக்கிடையே சில முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் எதிர்வரும் நாட்களில் சீன தூதுவரினடம் இலங்கை அரசாங்கம் விளக்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அவரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் சீன தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)