செய்திகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியது

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியுள்ளது.மேலும் இக்கூட்டத்திற்கு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், நிருவாகக் குழு, மத்தியகுழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக் கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இன்று சனிக்கிழமை அக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் குறித்த கூட்டம் ஆரம்பமானது.(15)