இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்பு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அத்துடன் திருகோணமலை நகரசபை மண்டப வளாகத்தில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிப்பதையும் அவதானிக்கமுடிகின்றது.
இதேவேளை வாக்கெடுப்புச் செயற்பாடுகளுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்றவேளை, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவரான மாவை சேனாதிராசா, போட்டி வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சறீதரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரை அழைத்து நீண்டநேரம் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மற்றும், கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டக்கிளைகளைகள் மற்றும், கொழும்புக்கிளை உள்ளிட்ட ஒன்பது மாவட்டக்கிளைப் பிரதிநிதிகள், மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்கள் இந்த தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
அந்தவகையில் வாக்கெடுப்பு இடம்பெறும் குறித்த நகரசபை மண்டபத்தின் வெளிப்புறமாக ஒவ்வொரு மாவட்டக்கிளை உறுப்பினர்களினதும், மத்தியகுழு உறுப்பினர்களதும் உறுப்புரிமை பரிசோதிசோதிக்கப்பட்டு, உறுப்புரிமை உறுதிப்படுத்தபின்னர் அவர்களுக்கான கட்சியின் அடையாள அட்டை வழங்கப்பட்டு வாக்கெடுப்பு மண்டபத்திற்குள் கட்சி உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டதை அவதானிக்கக்கூடியதாகவிருக்கின்றது.(15)





