இலங்கை தாயொருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்தார்!
இலங்கை தாயொருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள காசல் வீதி வைத்தியசாலையில் குறித்த தாய் 6 ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆறு குழந்தைகளும் தற்போது குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் வைத்தியர் சமன் குமார தெரிவித்தார்.
ஐந்து குழந்தைகள் காசல் வீதி வைத்தியசாலையிலும் ஒரு குழந்தை கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-(3)




