செய்திகள்

இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

‘ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த அவர் கட்டாரில் இருந்து அவர் நேரடியாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் வனிந்து ஹசரங்கவுக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால், வியாஸ்காந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த முத்தரப்பு தொடரில் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை சிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.