இலங்கை பிரிகேடியரை வெளியேற்றக்கோரி பிரித்தானியாவில் தமிழ்மக்கள் பாரிய ஆர்ப்பாட்டப்பேரணி: இடைக்கால அறிக்கையும் கொளுத்தப்பட்டது
லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கு கழுத்தறுக்கபப்டும் என்று சைகை மூலம் எச்சரிக்கை செய்த இலங்கை பிரிகேடியருக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி லண்டனில் நேற்று பாரிய ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டிருக்கிறது.
தமிழ் அமைப்புக்கள் பல ஒன்று சேர்ந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்ட பேரணி லண்டனின் இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆரம்பமாகி பிரித்தானிய வெளிநாட்டமைச்சு அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் மனித உரிமை செயற்பட்டாளர்களும் கலந்துகொண்டனர். பிரிகேடியரின் இந்த கொலை அச்சுறுத்தலை கண்டும் காணாமலும் பிரித்தானிய அரசு இருந்து வருவதாகவும் இந்த மெத்தனமான போக்கை கண்டிப்பதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்ட காரர்கள் உடனடியாக பிரிகேடியரின் ராஜதந்திர விசாவை ரத்து செய்து அவரை நாட்டைவிட்டு வையற்றவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் அரசியல் யாப்பும் உத்தேச அரசியலமைப்புத்திருத்த இடைக்கால அறிக்கையும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.





