செய்திகள்

”இலங்கை பொலிஸ்” என்றே அழைக்க வேண்டும்

பொலிஸை அழைப்பதற்காக உரிய பெயரொன்றினை பயன்படுத்துதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பொலிஸானது பல்வேறு யுகங்களிலும் ஒவ்வொரு காலப் பகுதிகளிலும் பல்வேறுபட்ட பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டது. 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் பொலிஸ் திணைக்கள கட்டளையின் கீழ் பொலிஸானது “இலங்கைப் பொலிஸ் படையணி” என அழைக்கப்படுவதுடன், 1945 ஆம் ஆண்டின் பின்னர் “இலங்கைப் பொலிஸ் திணைக்களம்” என அழைக்கப்பட்டது.
1972 ஆம் ஆண்டு முதல் பொலிஸ் திணைக்களமானது “இலங்கை பொலிஸ் சேவை” என அழைக்கப்படுகின்றது. நீண்ட வரலாற்றினைக் பொலிஸ் திணைக்களமானது தமது 150 ஆம் ஆண்டு நிறைவினை கொண்டாடுகின்ற நிலையில், இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தை அழைப்பதற்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயராக “இலங்கைப் பொலிஸ்” என இனி வரும் காலங்களில் அழைப்பது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  -(3)