செய்திகள்

இலங்கை போக்குவரத்து துறையினர் மற்றும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையிலானஇணைந்த நேர அட்டவணை

வடமாகாண இலங்கை போக்குவரத்து துறையினர் மற்றும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையிலானஇணைந்த நேர அட்டவணையினை தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் யாழ்.குருநகரில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அலுவலகத்தில் நடைபெற்றது.

இவ் விசேட கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சர் டெனீஷ்வரன் தலைமையில் அமைச்சரின் செயலாளர்,5 மாவட்டங்களின் பிரதமகணக்காளர்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள், இ.போ.ச உத்தியோகத்தர்கள்  இலங்கைதனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடததக்கது.

மேலும் இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து மாகாணத்துக்குள்செல்கின்ற பேருந்து சேவைகளின் நேர அட்டவணை பரிசீலிக்கப்பட்டு இறுதியாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது

எனைய மன்னார், யாழ் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கிடையிலான நேர அட்டவணை ஏலவே பல விசேடகலந்துரையாடலின் மத்தில் தீர்மானிக்கப்படிருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது 5 மாவட்டங்களுக்கும் இடையிலான பூர்த்தி செய்யப்பட்ட நேர அட்டவணை அமைச்சின்செயலாளர்களின் மாவட்ட அரச அதிபர்களின் கையொப்பம் பெறும் பொருட்டு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும்அறியக்கிடைக்கிறது. இவ் விசேட கலந்துரையாடலின்போது கடந்த 3ம் திகதி திருநல்வெலியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிர் நீத்த மாணவன்  மற்றும்,நேர அட்டவணை தயார் செய்ய பல வழிகளிலும் உதவி புரிந்த அண்மையில் அகால மரணமான வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்க முகாமையாளர் பரம்சோதி கண்ணன் அவர்களுக்கும் அவர்களின் ஆன்ம சாந்திக்காகவும் விசேட அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிட தக்கது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் யுத்தத்தின் பின்னர் இயற்கை மரணத்தினால் உயிர் நீத்தவர்களின் எண்ணிக்கையை விட விபத்துக்களினால் ஏற்பட்ட மரணத்தின் எண்ணிக்கையே அதிகம் எனவும் இதற்கு இலங்கை போக்குவரத்து சபையினரும்  தனியார் துறையினருக்கும் இடையிலான போட்டித்தன்மையும் ஒழுங்காக இணைந்த நேர அட்டவணையினை பின்பற்றாமையும், வீதி ஒழுங்குகளை பின்பற்றாமையும் சாரதிகளின் அசமந்த போக்குமே காரணம் எனவும் தெரிவித்தார்.

தற்போது தயார் செய்யப்பட்டுள்ள நேர அட்டவணையானது இரு தரப்பினரது பங்குபற்ருதலோடும் வட மாகாணதிற்கான ஓர் போக்குவரத்துக் கொள்கையுடனும் 60 க்கு 40 என்ற விகிதாசாரத்தில் உருவாக்கப்படுள்ளது. இதன்வாயிலாக இரு தரப்பினரதும் உரிமைகளும் உள்வாங்கப்பட்டு பொதுமக்களுக்கான ஓர் பாதுகாப்பான போக்குவரத்து சேவையும் முன்னிலைப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 ஆகவே அமுல்படுத்தப்படுகின்றபோது இரு தரப்பினரும் தங்களது இலாப நோக்கதினைமட்டும் கருத்தில் எடுக்காது பொதுமக்களின் உயிர், பாதுகாப்பான சேவை, என்பவற்றை கருத்திலேடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றார்.

மேலும் தெரிந்த நேர அட்டவணையினையும் ஒழுங்கு விதிகளையும் பின்பற்றாது செயற்படுகின்ற எந்த தரப்பினராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் தயவு செய்து தங்களை நம்பி ஏறுகின்ற பிரயாணிகளையும், வீதியில் செல்கின்ற பொதுமக்களின் உயிர்களையும் பாதுகாக்குமாறு அன்பாக கேட்டுநிற்பதாக தெரிவித்தார்.

n10