செய்திகள்

இலங்கை – மலேசியா வர்த்தக குழு கூட்டம்

இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கிடையே காணப்படும் வியாபார மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்தும் நோக்குடன் இரு நாட்டின் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட வர்த்தக குழுக்கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனயின் தலைமையில் நேற்று பிற்பகல் கோலாலம்பூரில் இடம்பெற்றது.
இரு நாடுகளினதும் முதலீட்டுச் சபைகள், ஏற்றுமதி அபிவிருத்தி சபைகள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக் கூட்டத்தில் இரு நாடுகளையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் பங்குபற்றினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் புதிய முயற்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் அதற்கான பல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று வருடங்கள் “இலங்கையின் அபிவிருத்திக்கான வருடங்கள்” என பெயரிடப்பட்டுள்ளதுடன் அச்சமின்றி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தமது அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். -(3)