செய்திகள்

இலங்கை விமானப்படையின் பெல் -206 ரக ஹெலிக்கொப்டர் பயிற்சின் போது விபத்தில் சிக்கியது

விமானப் படையின் பெல்-206 ரக ஹெலிக்கொப்டர் ஒன்று ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இன்று காலை 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உலங்குவானூர்தியை பயிற்சி விமானி தரையிறக்கிய போது, அதன் காற்றாடிகள் சரியாகச் செயற்படாததால், ஓடுதளத்தில் மோதித் தரையிறங்கியது.

இதனால் உலங்குவானூர்தி சேதமடைந்த போதிலும், அதில் இருந்த பயிற்சி விமானி மற்றும் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் காயங்களின்றித் தப்பினர் என்றும் விமானப்படைப் பேச்சாளர் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.
R-06