இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அழைப்பை தட்டிக்கழித்து வரும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் யார் ?
நல்லாட்சி அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணையொன்றுக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புகளை புறக்கணித்து செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அமைச்சர் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த ஆணைக்குழுவினால் இது வரை 10 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் ஒரு தடவையேனும் அங்கு செல்லவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு தடவையும் தான் அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் சந்திப்பில் இருக்கின்றேன். விசேட கூட்டம் உள்ளது என்று கூறி அதனை தட்டிக்கழித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் பிரபலமானவர் என்பதனால் அந்த விடயத்தில் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
R-06




