செய்திகள்

இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக மேலும் 2 சுங்க அதிகாரிகள் கைது

சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 12.5 கோடி ரூபா இலஞ்ச ஊழல் மோசடி சம்பவத்துடன் தொடர்பில் மேலும் இரண்டு சுங்க உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாகன உதிரிப்பாக இறக்குமதியாளர் ஒருவரை சுங்கக் கட்டணங்களில் இருந்து விடுவிப்பதற்காக, 12.5 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட மூன்று சுங்க அதிகாரிகள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய, நாட்டின் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சுங்க உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.