இளம் இயக்குனரை கைவிட்ட விக்ரம்
இருமுகன் முடித்த பிறகு உடனே பிரம்மன் இயக்குனரை கூப்பிட்டு ஒரு கிராமத்து கதை கேட்டார் விக்ரம். சாக்ரடீஸ். சொன்ன கதை பிடித்துப்போகவே உடனே கரிகாலன் படத்தை துவக்கி, சில காரணங்களால் ட்ரோப் ஆன தயாரிப்பாளருக்கே இந்த படத்தை செய்து கொடுக்கலாம் என்று இருந்தார்
ஆனால் அவரே எதிர்பாராத விதமாக இருமுகன் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே சாமி 2 -க்கான அறிவிப்பை வெளியிட்டார் இருமுகன் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ். ஹரி காம்பினேஷன் என்பதால் ‘ஷ்யூர் ஹிட் ஆச்சே’ என கணக்கு போட்ட விக்ரம் பிரம்மன் இயக்குனரின் படத்தை தள்ளி வைத்துவிட்டு சாமி 2 வில் கவனம் செலுத்துகிறாராம்.
தற்போது பிரம்மன் சாக்ரடீஸ், விக்ரம் மீண்டும் கூப்பிடுவார் என்று காத்திருக்கிறார்.
N5




