இளைய தலைமுறை தமிழ் அரசியல்வாதிகளின் பாராளுமன்ற அரசியல்
வீ. தனபாலசிங்கம்
புதிய பாராளுமன்றத்தில் நான்கு தமிழ் உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்துகொண்டு எல்லோரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்கள் கருத்துக்களை சிறப்பாக முன்வைக்கிறாரர்கள்.வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாாக இருந்தாலும், கட்சிவேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் பெரும் அனுதாபத்தை பெறுகிறார்கள்.
அவர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர் மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் ஏற்கெனவே 10 வருடங்கள் சபையில் அங்கம் வகித்தவர்.மற்றைய மூவரில் தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 10 வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.எஞ்சிய இருவரான உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் சாணக்கியன் ராகுல் இராஜபுத்திரன் இராசமாணிக்கமும் முதற்தடவையாக பாராளுமன்றத்துக்கு வந்திருப்பவர்கள்.
இவர்கள் நால்வரும் ஆளுமைத்திறமையுடன் ஆங்கிலத்தில் உரையாற்றுவதாவ் தமிழ் மொழியை விளங்கிக் கொள்ளமுடியாத பல உறுப்பினர்கள் இவர்கள் கூறுவதை நேரடியாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.தமிழ் மக்களும்்நீண்டகாலத்துக்கு பிறகு தங்கள் சார்பில் வலவான முறையில் வாதங்களை முன்வைக்கக்கூடிய ஆளுமைமிக்கவர்கள் ஒரு சிலராவது பாராளுமன்றம் வந்திருக்கிறார்கள் எ்று மகிழ்ச்சியடைகிறார்கள்
விக்னேஸ்வரன் தனக்கேயுரித்தான முறையில் ஏற்னெவே தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கிறார்.இனஉஉணர்ச்சிகளைகி

சாணக்கியன் மும்மொழிகளிலும் சரளமாகப் பேசவதால், சபைக்குள் சகல தரப்பு உறுப்பினர்களினதும் கவனத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டார்.அவரது உரைகள் மிகவும் சுறுசுறுப்பானவையாகவும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்பவையாகவும் இருக்கின்றன.ஒரு பத்துநிமிட உரையில் மும்மொழிகளிலும் மாறிமாறி விவாதிக்கிறார்.முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தையும் சாணக்கியன் தயங்காமல் விமர்சிக்கிறார்.அவரத இந்த விமர்சனங்களை முஸ்லிம் மக்கள் வரவேற்கிறார்கள்.
சாணக்கியன் இதே திறமையுடனும் துணிச்சலுடனும் தொடர்ந்து இயங்குவாராயின் கிழக்கில் தமிழர் அரசியலில் தற்போது நிலவும் தலைமைத்துவ வெற்றிடத்தை எதிர்காலத்தில நிரப்பக்கூடியவராக வளருவார் என்று பலரும் நம்புகிறார்கள்.
தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைசிறந்த சட்ட நிபுணர்களாகவும் கற்றறிந்த பெருமகன்களாகவும் விளங்கிய நீண்ட காலகட்டமொன்று இருந்தது.அவர்கள் எல்லோரும் சிறந்த விவாதிகளாக இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை.இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பாராளுமன்ற அரசியல்மூலமும் சிறந்த ஆங்கில உரைகளின் மூலமும் தமிழர் பிரச்சினைக்கு தீரவுகண்டுவிட முடியும் என்ற வாதமாக வியாக்கியானப்படுத்தவும் தேவையில்லை..
தமிழர்களுக்கு இப்போது இருக்கக்கூடிய ஒரே மார்க்கம் ஜனநாயக அரசியலே என்று வந்தபிறகு அந்த அரசியலின் முக்கியமான அங்கமா்ன பாராளுமன்ற அரசியல சிறப்பாக பயன்படுத்தக்கூடிய ஆற்றல் இளைய தலைமுறை அரயல்வாதிகளுக்கு தேவையல்வா?
நன்றி: வீரகேசரி




