இவர்களின் எதிர்காலத்திற்கு உதவுங்கள்
எம்.கருணாகரன்
கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேசத்திற்கு உட்பட்ட கந்தலோயாவின் ஒரு பிரிவுத்தான் மேமலை. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. 70 குடும்பங்கள் இருந்த தோட்டத்தில் தப்போது 17 குடும்பங்கள் மட்டுமே. முடித்தவர்கள் தோட்டம்விட்டு போய்விட்டார்கள். மேமலையில் இருந்து கந்தலோயா ஸ்கூலுக்கு 08km. இவ்வளவு தூரத்தை நடந்தே வரவேண்டும்.
அடர்ந்த காடு.சிறுத்தை பயம் வேறு. இரண்டு வருடத்துக்கு முன் சிறுத்தை பிடிக்கப்பட்டது. மொத்தமாக 30மாணவர்கள். பாடசாலை வருவதோ,04மாணவர்கள். அதுவும், மழைகாலத்துக்கு ஸ்கூல் பக்கமே வர மாட்டார்கள். அவர்களுடன் பல முறை கலந்துரையாடியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. வயிற்றுக்கே கையேந்தும் நிலையில் இருப்பவர்களுக்கு,என்ன படிப்பு? இப்போதுமட்டும் படிப்பு தேவையென்று அவர்கள் சொல்லவில்லை. அவர்களுக்கு படிப்புத்தேவையென்று நாம்தான் உணரவேண்டும். நேரடியாக வந்து பார்த்தீர்களென்றால் இந்த நவீன அடிமைகளை காண்பீர்கள். 200வருடங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்த அதே நிலையில்… இவர்கள் கல்விக்கற்க வேண்டுமென்றால், கந்தலோவில் வந்து போடிங் இருக்க வேண்டும். ஒரு பிள்ளைக்கு 4000/-(ஒருமாதத்திற்கு) வேண்டும். நஷ்டத்தில் இயக்கும் கந்தலோயா தோட்டத்தில், ஒருகிழமைக்கு 03நாட்களே வேலை.இதுல வேறு, போடிங் காசை எப்படி கட்டுவார்கள்? நேரடியாக உங்களிடம் எதிர்ப்பார்ப்பது என்ன? ஆகக்குறைந்து ஒரு வருடத்துக்கான ஓரு மாணவரின் போடிங் காசை, நல் உள்ளம் படைத்த ஒருவரால் பொறுப்பேற்க முடியுமென்றால், அதுவே பெரிய உதவியாக இருக்கும். அத்தனை மாணவர்களையும் என்பது, அப்புறமாக இருக்கட்டும். முதலில் ஒருவர் முன்வந்து ஒரு மாணவரை ஆகக்குறைந்து, 01 வருடத்துக்கு பொறுப்பேற்றாலே இந்தப் பதிவின் நோக்கம் எட்டக்கூடியதே. –(3)





