செய்திகள்

ஈரோஸ் ஜனநாயக முன்னணி என்னும் அரசியல் கட்சி மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது…..!

மட்டக்களப்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி என்னும் அரசியல் கட்சி இன்று சனிக்கிழமை காலை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

ஈரோஸ் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் இணைந்து இந்த கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வும் கொள்கைப்பிரகடனம் செய்யும் நிகழ்வும் இன்று காலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் ஈரோஸ் இயக்கத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் ரி.இராஜேந்திரா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள்,அதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

அண்மையில் ஈரோஸ் இயக்கத்தின் மாநாடு நடைபெற்ற நிலையில் ஈரோஸ் இயக்கத்தின் ஒரு பகுதியினர் இணைந்து ஈரோஸ் ஜனநாயக முன்னணியை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

N5

IMG_0069 copy

 

IMG_0064 copy