செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இருந்து ரிஷாட் விடுதலை!

2019 ஆம் ஆண்டில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய அந்த வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலினி கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் தொடர்புகளை பேணியதாக ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதன்படி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த ரிஷாட் பதியூதின் பல மாதங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-(3)