செய்திகள்
உண்மைக்காக இன்னமும் போராடுதல்- ஓரு பெண்ணின் இடைவிடாத நீதிக்கான தேடல்
யொலன்டா பொஸ்டர்- சர்வதேச மன்னிப்புச்சபை
சந்தியா எக்னலிகொட 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் காணமற்போன ஊடகவியலாளர், கருத்தோவியர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி.அந்த துயரமான நாளிலிருந்து சந்தியா நீதிக்கான தனது போராட்டத்தை தொடர்ச்சியாக தளர்வின்றி முன்னெடுத்து வருகின்றார்.
இலங்கையில் தனது கணவர் தொடர்பான பிரச்சாரத்தை முன்னெடுப்பதுடன் மனித உரிமை பேரவைக்கு இது தொடர்பில் சாட்சியமளித்துள்ளார்.2015 இல் அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் வீட்டிற்கு வெளியே தேங்காய்களை உடைக்க முயன்றார்,( இலங்கை பெரும்பான்மை சமூகத்தில் இது சபிப்பதற்கான குறியீடு) உண்மையை மறைப்பதற்;கு முயலும் அரசாங்கத்திற்கு எதிராக இது துணிச்சலான நடவடிக்கை.
2015 இல் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தபின்னர் அவரது குடும்பத்தினர் மத்தியில் நம்பிக்கை உண்டானது உண்மை.மார்ச் 23 2015 இல் பொலிஸ் மா அதிபர் பிரகீத் காணமற்போனது தொடர்பில் புதிய விசாரணைகளிற்கு அழைப்பு விடுத்தார்,கிரிதல இராணுவபுலனாய்வு முகாமை சேர்ந்த 9 புலனாய்வாளர்கள் குற்றப்புலனாய்வாளர்களால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர்,பொலிஸார் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளபோதிலும் இந்த வழக்கு நீண்டுகொண்டே செல்கின்றது- தான் இதுவரை 80 தடவைகளிற்கு மேல் நீதிமன்றம் சென்றுள்ளதாக சந்தியா சர்வதேமன்னிப்புச்சபைக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வேகம் இந்த பிரச்சினைக்கான ஓரு காரணமாக காணப்படுகின்றது,இதனை விட முக்கியமாக ஹோமகம நீதிமன்றம் தன்னுடன் ஓத்துழைக்குமாறு விடுத்த வேண்டுகோள்களை இராணுவபுலனாய்வு தரப்பு ஏற்கமறுத்து தடைகளை ஏற்படுத்தி வருவது குறித்து சந்தியா கடும் கவலை கொண்டுள்ளார்.இதேவேளை தங்கள் கணவன்மார்களை நீண்டநாட்கள் தடுத்துவைத்திருப்பது சட்டவிரோதமானது என தெரிவித்து இராணுவபுலனாய்வாளர்களின் மனைவிமார் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சந்தியாவை நீதிக்காக போராடுபவர் என்ற வகையில் எனக்கு தெரியும்,அவர் கொழும்பின் வீதிகளில் இறங்கி போராட தயாராகவுள்ள அதேவேளை நீதிமன்றத்தில் நடப்பவற்றையும் உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளார்.பிரகீத் காணமற்போன நாள் முதல் தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் அவர் சிலவேளைகளில் கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பலவந்தமாக காணமற்போகச்செய்யப்பட்டோர் தொடர்பான ஐக்கியநாடுகள் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக இந்த வருடம் ஜெனீவாவிற்கு சென்ற வேளை அவர் கொழும்பில் உள்ள தனது பிள்ளைகள் குறித்து கவலையுடன் காணப்பட்டார்.அவர்களுடைய கல்வி பராமரிப்பு குறித்த கவலை அவரின் மனதில் எப்போதும் காணப்படுகின்றது.
ஆகஸ்ட் 30 திகதி கொழும்பில் காணமற்போனவர்கள் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் ஏனைய தாய்மார்களை உண்மைக்காக போராடுமாறு தூண்டினார், ‘‘ எங்கள் கண்ணீர்கள் இடியை போன்று இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.ஆனால் பிரகீத்காணமற்போனது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படலாம் என்ற அச்சம் அவர் மனதில் காணப்பட்டது.
ஓக்டோபர் மாதம் ஜனாதிபதி சிறிசேன உரையொன்றில் பிரகீத்விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.
இது அவர்களை விடுதலைசெய்யுமாறு நீதித்துறை மீது அழுத்தங்களை கொடுக்கும் செயல் என சந்தியா என்னிடம் தெரிவித்தார்.
ஓக்டோபர் 24 ம் திகதி புலனாய்வாளர்களின் வழக்கு தொடர்பான விசாரணைக்காக நான் சந்தியாவுடன் அவிசாவளைக்கு சென்றேன்- அது சுலபமான பயணமல்ல-கடும் மழை காரணமாக எங்கள் பேருந்து பயணங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தன,நீதிமன்றகூரையின் மீது மழை விழுந்துகொண்டிருந்த அந்த தருணத்தில் சந்தியாவின் பதட்டம் அதிகரித்ததை நான் உணர்ந்தேன்,சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுவிடுவார்கள் என அவர் அச்சம் கொண்டிருந்தார்,குறிப்பிட்ட வழக்கை தாமதிக்குமாறு அரச சட்டத்தரணி விடுத்தவேண்டுகோளை நீதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்தார்,பல வழக்குகள் இருப்பதே அதற்கு காரணம் என்றார், அன்று மதியம் வழக்கறிஞர்களை மீண்டும் வருமாறு அவர் கோரினார்,பின்னர் அன்று இரு சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு அவர் உத்தரவிட்டார்,இது ஓரு குழப்பகரமான விவகாரம் தான்,சந்தேகநபர்கள் 14 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்,- சந்தேகநபர்கள் நீண்டகாலம் தடுத்துவைக்கப்படுவது குறித்து சர்வதேசமன்னிப்புச்சபை தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது, குற்றங்களை சுமத்துங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்பதே சர்வதேச மன்னிப்புச்சபையின் நிலைப்பாடாக உள்ளது.நீதிபதி பிணைக்கான ஆகக்கூடிய நிபந்தனைகளை விதித்தார்.
சந்தேக நபர்கள விடுதலை காரணமாக சந்தியா அதிருப்தியடைந்தமை தெளிவாக தெரிந்தது,அவர் தனக்கு பாதுகாப்பை கோரினார்,நீதித்துறை மற்றும் ஊடகங்களின் சுதந்திரத்தை அவர் கோரினார். ஆனால் ஓரு போராளி என்பதால் அவர் ஏற்கனவே எவ்வாறு தொடர்ந்து போராடுவது என்பதை தீர்மானித்துள்ளார் ‘‘ நாங்கள் உண்மைக்காக போராடவேண்டும்,எனக்கு சிறிய துண்டு எலும்பு போதும் அது நான் பிரியாவிடை சொல்வதற்கு உதவும்,என்னால் அமைதியாகயிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் துணிச்சலும் விடாமுயற்சியும் நீதிக்கான தேடலில் சந்தியா மாத்திரம் ஈடுபடவில்லை,இலங்கையின் பல பெண்கள் சாட்சியமளிக்க முன்வந்துள்ளதுடன் நீதியையும் கோரி நிற்கின்றனர்.தங்கள் குடும்பத்தவர்களிற்கான தேடலின் போது அவர்கள் பலவகையான தந்திரோபாயங்களை பயன்படுத்துகின்றனர், அவர்கள் பொலிஸிடம்,நல்லிணக்க ஆணைக்குழுவிடம்,அரசஅதிபர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் என பல தரப்பட்டவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
சந்தியா போன்றவர்களின் நீதிக்கான தேடல் பல காலமாக தொடர்கின்றது,இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்களாகின்றன,ஆனால் பொறுப்புக்கூறல் குறித்த வாக்குறுதிகள் இன்னமும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. கடந்த இருண்ட காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கை அரசாங்கங்கம் தான் ஐக்கியநாடுகளிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும், இவ்வருட ஆரம்பத்தில் பலவந்தமாக காணமற்போகச்செய்யப்படுதல் குறித்த பிரகடனத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது,மேலும் அரசாங்கம் காணமற்போனவர்கள் குறித்த அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
ஆனால் இவை உண்மையை கண்டறிவதற்கான இதயசுத்தியுடனான நடவடிக்கைகளா?
இது வரை எவரும் இந்த அலுவலகத்தின் தலைமைப்பதவிக்கு நியமிக்கப்படவில்லை இந்த அலுவலகம் குறித்து தங்களுடன் கலந்துரையாடப்படாததால் தாங்கள் கைவிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கருதுகின்றனர்.
அடுத்தது என்ன?
இன்றும் நாளையும் கூடவுள்ள சித்திரவதை குறித்த ஐக்கியநாடுகள் குழுவின் அமர்வில் பிரகீத் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.




