உண்மையான மனிதநேய மீட்புத் தேவைப்படும் தருணம்
மருத்துவர்..சி.யமுனாநந்தா
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பாரிய மனித நேய இடரை நோக்கி நகரும் சாத்தியம் உள்ளது. இலங்கையின் கடந்த கால வரலாற்றில் செயற்கையான வன்முறைகளால் பாரிய மனித அவலம் ஏற்படுத்தப்பட்டு இலங்கை அரசியலில் வெளிநாட்டுத் தலையீடுகளும் இராணுவ அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்பட்டன. இவற்றிற்கு மனிதபிமான நடவடிக்கைகள் என பெயரும் சூட்டப்பட்டன. பல சர்வதேச தொண்டு நிறுவனங்களும் , சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு என்பன தம் பணியினைச் செய்தன.
தற்போதைய பொருளாதாரத் தாழ்வு நிலை பாரிய மனிதநேய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. வைத்தியசாலைகளில் அத்தியா அவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அரச நிர்வாக இயந்திரம் செயலிழக்கும் நிலையிலுள்ளது.
எனவே பட்டினி, மருத்துவக் கவனிப்பு இன்மை என்பனவற்றால் உயிரிழப்பு ஏற்படாது இருக்கவும், சழுக அமைதியின்மை , கலவரங்கள், வன்முறைகள் ஏற்படாது இருக்கவும் பாரிய மனிதபிமான மீட்பு திட்டங்களை இலங்கையில் மேற்கொள்வதற்கு இந்திய அரசு சர்வதேச இராஜ தந்திர ரீதியில் தீர்மானிக்க வேண்டும். மேலும் சார்க் அமைப்பின் சார்பிலும் கடப்பாடு உள்ளது.


