செய்திகள்
உண்மையை சொன்ன விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டுக்கள்
நடிகர் விஜய் சேதுபதியின் தர்மதுரை படம் சூப்பர்ஹிட் ஆனதால் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.
மேலும் அவர் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் பாதியை, ஏழை குழந்தைகள் படிப்பிற்காக கொடுத்துவிட்டார் என்ற செய்தி இன்று மீடியா மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால் அந்த செய்தி வெறும் வதந்திதான், உண்மையல்ல என விஜய் சேதுபதி தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பெருமையாக தானே பேசுகிறார்கள் என விட்டுவிடாமல், உண்மையை சொன்ன விஜய் சேதுபதியின் நேர்மையா பாராட்டியே ஆக வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
N5




