உதயங்க விரதுங்க அனுப்பிய கொள்கலனை சோதனையிட நீதிமன்றம் அனுமதி
ரஷியாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பொருட்கள் அடங்கிய கொள்கலனை சோதனைக்கு உட்படுத்துவதற்கு பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுகொண்டுள்ளனர்.
குறித்த கொள்கலன் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் என்ன இருக்கின்றது என அறிந்துக்கொள்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் ரஷ்யாவில் பயன்படுத்தி வீட்டுப்பொருட்களே அந்த கொள்கலனில் காணப்படுவவதாகவும் அதனை விடுவிக்குமாறும் உதயங்க வீரதுங்க அண்மையில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். ஆனால் அதற்கு உரிமையாளர் அவர் என்பதால் அவர் இங்கு வராது அதனை விடுவிக்க முடியாது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.




