செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார்

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்று வரும் விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்படி தமிழகத்தின் 35 ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.

தொடர்ந்து ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.

பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

-(3)