செய்திகள்

உதவி பொலிஸ் அத்தியட்சர் பதவியை கோரும் இராஜங்க அமைச்சர்

தன்னை உதவி பொலிஸ் அத்தியட்சராக நியமிக்குமாறு இராஜங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தான் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றும் போது அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கானதாகவும் இதனால் தான் பொலிஸ் பதவியிலிருந்து பதவி விலகியதாகவும் இதனால் தற்போதைய அரசாங்கத்தில் தனக்கு உதவி பொலிஸ் அத்தியட்சர் பதவியை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு அவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   -(3)