செய்திகள்

உ/த பெறுபேறு 10ஆம் திகதிக்கு முன்?

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படலாம் என பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி பெரும்பாலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பெறுபேறுகள் வெளியாவதற்கான சாத்தியங்கள் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெறுபேறு வெளியானதும் www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் அதனை பார்வையிடலாம்.