உயர்தரத்தில் முதலிடம் பெற்றவர்கள்
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கொழும்பு, மாத்தறை மற்றும் காலியைச் சேர்ந்த மாணவர்கள் பிரதான நான்கு பாடப் பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று முன்தினம் மாலை வெளியாகியிருந்தது.
நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றோர் விபரம்:
இதன்படி, உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா வித் தியாலயத்தைச் சேர்ந்த பிரமோதி பாஷானி முனசிங்க முதலாம். இடத்தைப் பெற்றுள்ளார்.
பௌதீக விஞ்ஞான பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த மனேத் பானுல பெரேரா முதலாம் இடத்தைப் பெற் றுள்ளார்.
வர்த்தகப் பிரிவில் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச்சேர்ந்த கவிதினி தில்சரணி தருஷிகாமுதலாம். இடத்தைப் பெற்றுள்ளார்.
கலைப் பிரிவில் கேகாலை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி மாணவி டபிள்யூ.ஏ.எம். சச்சினி சத்சரணியே முதலாம் இடத் தைப் பெற்றுள்ளார்.
பொறியியல் தொழிநுட்ப பிரிவில் காலி ரிச்மண்ட்கல்லூரியைச் சேர்ந்த சமுதித நயனப்பிரிய முதலிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை 2022 (2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களில் 166,938 பேர் இந்த ஆண்டு பல்க லைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தகுதி பெற்றவர்களில் 149,487 பாடசாலை விண்ணப் பதாரர்களும் 17,451 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடம் 263,933 விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக் குத் தோற்றியிருந்ததுடன், 84 பேரின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளில் ஏதேனும் சந்தேகம் இருக்கம் பட்சத்தில் மீள் திருத்தம் செய்துகொள்வதற்கான திகதி களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், 11.09.2023 இருந்து 16.09.2023 ஆகிய திக திகளுக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டம் எனவும் மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-(3)




